Saturday, April 4, 2015

Siru Deivangal (Tiny GODS)

பேருந்தே இல்லாத கிராமங்களுக்குள் பயணிக்கையில் இது போன்ற அற்புதங்கள் காணக் கிடைக்கின்றது. இந்த சிறு தெய்வ வழிபாடு இன்று நேற்று தோன்றியதல்ல, பல நூறு வருடங்களுக்கு முன்னால் இருந்தே கிராமத்தில் வாழ்ந்து வந்த மக்கள் தங்கள் கால்நடைகளைக் காப்பாற்றவும், மழை வேண்டியும், பயிர்கள் செழிக்கவும், தங்கள் இதயத்திற்கு நெருக்கமான, தங்களில் ஒருவராக தங்கள் ஊர்களில் இருந்த இது போன்ற சிறு தெய்வங்களை வழிபட்டனர். புராணங்களில் வருவதைப் போல் வானத்தில் இருந்து வந்தவையல்ல இந்த தெய்வங்கள். சண்டைகளில் உயிர் நீத்த வீரர்களும், கணவரோடு உடன்கட்டை ஏறிய பெண்களும், கண்ணகியைப் போல் போராடிய பெண்களே சிறு தெய்வங்களாகினர். காலம் மாற சில குறிப்பிட்ட இனக்குழுக்களின் தெய்வங்களாக இருந்த இந்த சிறு தெய்வங்கில் சில பெருந் தெய்வங்களாகவும் உருவெடுத்தது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டே முருகன். கொற்றவை போன்ற தெய்வங்கள். இந்த சிறு தெய்வங்கள் குறித்து அப்பர் கூட தன் தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார். பெரிய சிற்ப வேலைப்பாடுகள் ஏதும் இல்லாமல் இருப்பதை வைத்தே இது எவ்வளவு நூற்றாண்டுகள் பழைமையானதாக இருக்கும் என்பதை நம்மால் ஊகிக்க முடியும். அப்படிப்பட்ட இந்த தெய்வத்திற்கு பல நூறு வருடங்கள் கடந்தும் தொடர்ந்து வழிபாடு நடந்து கொண்டிருக்கின்றது. இதுவே இந்த மண்ணின் ஆணிவேர்.

அழைத்துச் சென்று காட்டிய திரு.வீர ராகவன் அவர்களுக்கு நன்றி.




Tiny GODS concept are being followed for many 100 years mainly to protect their pets and cattle. These GODS are different from myths. These Tiny GODS are mostly humans who lived earlier to protect the village or the country and any other good deeds. One best example for these GOD is Lord Murugan. Even Appar has mentioned about Tiny GODS in thevaram. The sculpture itself looks very old. Not sure about the exact age for this sculpture. Thanks to Mr. Ragavan who showed this.

~Sasi

Mahavir

இவர் தான் மகாவீரர், இவருக்கு தான் இன்னைக்கு பிறந்தநாள் smile உணர்ச்சிலை (Apr 2)

கி.பி.எட்டாம் நூற்றாண்டு.
பல்லவர் காலம்.
திறக்கோயில் (வந்தவாசி அருகில்)


Mahavir Jayanthi
8 CE
Place : Thirakoil
Period : Pallavas

Amazing Sculptures

இந்த கூந்தலில் இருக்கும் மெல்லிய கோடுகளுக்காக எத்தனை மணி நேரம் உழைத்திருப்பார்கள்!
திருக்குறுங்குடி, திருநெல்வேலி மாவட்டம்.
நாயக்கர் காலம்.


Just imagine the amount time spend for creating those lines on a hard rock so that it exactly resembles like hairs. 

Place: Thirukurungudi, Thirunelveli Dist
Period : Nayakas

~Sasi